அலைபேசி பார்ப்பதை குறைத்து, பிடித்த விளையாட்டை விளையாடுங்கள் என மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார். திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.