Ramadoss vs Anbumani Fight | கடைசியாக என்ன தான் முடிவு? - GK மணியிடம் ராமதாஸ் சொன்னது இதான்
பாமகவில் நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே பூசல் நிலவி வரும் நிலையில், விரைவில் நல்ல செய்தி வரும் என்று கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை கட்சியின் மூத்த தலைவர்கள் நான்காவது நாளாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, சித்திரை முழு நிலவு மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்கட்சி விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.மணி தெரிவித்தார்