"காமராஜரை பற்றி பேசினால்..." - சரத்குமார் எச்சரிக்கை

Update: 2025-07-29 03:59 GMT

காமராஜரை பற்றி தவறாக பேசினால், அவரை எதிர்த்து எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என பாஜக பிரமுகரும், நடிகருமான சரத்குமார் பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் காமராஜர் சிலையை நடிகர் சரத்குமார் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் காமராஜரை இழிவாக பேசுவது அதிகமாகி விட்டது என்றும், அரசியல் தெரிந்த திருச்சி சிவா சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் பேசினார். மேலும் காமராஜரை இழிவாக பேசினால் அவரை எதிர்த்து எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்றும் கூறினார். கல்விக் கண் திறந்த காமராஜர் அவர்களின் சிலையை, தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்