பாமகவில் நிலவிய சலசலப்புகளுக்கு சுமுக தீர்வு எட்டப்பட்டுள்ளதாக கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் நேரில் சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.