"அடுத்த பாமக கொறடா நான் தான்.."-மயிலம் சிவக்குமார் கிளப்பிய பரபரப்பு

Update: 2025-07-09 02:41 GMT

பாமகவின் சட்டப்பேரவை கொறடாவாக சபாநாயகர் தன்னை விரைவில் அறிவிப்பார் என அக்கட்சியின் எம்.எல்.ஏ மயிலம் சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பனையூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் மயிலம் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2026 ஜூன் வரை அன்புமணி ராமதாஸ் தான் பாமக தலைவராக தொடர்வார் என்பது பொதுக்குழு சட்ட விதி, எனவே பாமக வேட்பாளரின் ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்து இடும் அதிகாரம் அன்புமணிக்கு மட்டுமே உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்