கேரள மாநிலம் இடுக்கி அருகே சாலை வளைவில் வாகனத்தை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பான காட்சி வெளியாகியுள்ளது. பள்ளிப்படிக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.