அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஈபிஎஸ்

Update: 2025-04-14 10:43 GMT

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் அவரது சிலைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேலம் அம்பேத்கர் சதுக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு காலை முதலே அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சியினர் 500க்கும் மேற்பட்டோருடன் வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்