EPS | Ma.Subramanian | "அதுதெரியாம பேசுறாரு .." - EPSக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டின் 397 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து பல நாடுகளுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மருந்து ஏற்றுமதி நடந்துவரும் சூழலில், அதுதெரியாமல் ஈபிஎஸ் பேசிவருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
சென்னையை அடுத்த மேடவாக்கம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், டெங்குவால் ஒரு உயிரிழப்புக் கூட ஆகாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.