EPS | AIADMK | ``அதிமுக வாக்குகள் நீக்கப்படாமல்..'' கட்சியினருக்கு ஈபிஎஸ் பரபரப்பு அறிவுறுத்தல்
SIR மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் உடன் காணொளி காட்சி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இருந்து ஆலோசனை நடத்தினார்.
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இருந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 82 மாவட்ட செயலாளர்களோடு ஒன் டூ ஒன் முறையில் ஈபிஎஸ் கலந்துரையாடினார். அப்போது, SIR பணியின்போது அதிமுக வாக்குகள் நீக்கப்படாமல் இருப்பதை அதிமுக நிர்வாகிகள் உறுதி செய்யும் வகையில் கவனமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.