EPS | ADMK | Ranipettai | ஈபிஎஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம்- கே.சி.வீரமணி ஆய்வு
EPS | ADMK | Ranipettai | ஈபிஎஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடம்- கே.சி.வீரமணி ஆய்வு
ராணிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 19-ஆம் தேதி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு மேற்கொண்டார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகை தரவுள்ளார். அவருடைய பயணத்திற்கான முன்னேற்பாடுகள், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை உள்ள முத்துக்கடை பகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திக்க இருக்கும் இடத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.