ELECTION | kerala local body election | இந்த முறை படுதோல்வி - தேர்தலில் எதிர்பாரா அதிர்ச்சி
கேரளாவின் தமிழ்வாழ் மக்களை குறி வைத்து திமுக, அதிமுக கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன.தமிழக எல்லை இணைப்பு பகுதிகளான கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் மாவட்டங்களில் 15 வார்டுகளில் திமுக போட்டியிட்டது. அதேபோல் அதிமுக 25 வார்டுகளில் களம் கண்டது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் ஒரு வார்டில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. கடந்த 2015 உள்ளாட்சி தேர்தலில், போட்டியிட்ட 9 அதிமுக வேட்பாளர்களில் 6 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.