Edappadi Speech | ADMK Alliance | ``அதிமுக கூட்டணியில் இணையும் கட்சிகள்'' - எடப்பாடி சூசகம்

Update: 2025-08-12 06:54 GMT

அதிமுக, பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர உள்ளதாக எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஒசூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர உள்ளதாக தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற, தனது மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சார சுற்று பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் ஒசூரிலுள்ள ராம் நகர் பகுதியில் மக்களிடம் பேசிய அவர், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர உள்ளதாகவும், 2026 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்