சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜராகி கையெழுத்திட்டார். போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஆஜரானார். ஆதரவாளர்கள் யாருமின்றி சென்ற அமைச்சர், அதிகாரிகளின் வருகைக்காக சிறிது நேரம் காத்திருந்த நிலையில், பின் கையெழுத்திட்டு விட்டு புறப்பட்டார்.