Anbumani | PMK | அன்புமணி வெளியிட்ட புத்தகம் - திமுக தரப்பு மறைமுக பதிலடி
தொழில் முதலீடு விவகாரத்தில், திமுக பொய் கூறுவதாக பாமக தலைவர் அன்புமணி புத்தகம் வெளியிட்டுள்ள நிலையில், அவரை மறைமுகமாக விமர்சித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல், இதுவரை ஆயிரத்து பதினாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 11.4 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதோடு, 34 லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 23 சதவீதமும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்களில் 16 சதவீதமும் தங்கள் வணிக உற்பத்தியை எட்டியுள்ளாதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் புள்ளி விவரம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, உற்பத்தி துறையே காரணம் என கூறியுள்ளதாகவும், கெய்ன்ஸ் (Kaynes),ஃபோர்டு (Ford), கோத்ரெஜ் (Godrej) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தொடங்கி விட்டதாகவும் டி.ஆர்.பி ராஜா தெரிவித்திருக்கிறார்.