DMK vs Congress | காரசார வார்த்தை மோதலில் திமுக, காங். புள்ளிகள்

Update: 2026-01-06 05:21 GMT

அதிகார பகிர்வு குறித்து காங்கிரஸ், திமுக தலைவர்கள் மோதல்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தொடர்பாக காங்கிரஸ் – திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் திமுக முன்னாள் எம்.பி. அப்துல்லா இடையே நேரடி விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் யாரும் வெல்ல முடியாது, அதிகாரத்துடன் அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கு திமுக சார்பில் பதிலளித்த முன்னாள் எம்பி அப்துல்லா, “தமிழ்நாட்டில் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த இந்துத்துவ சமூக ஊடகங்கள் கடந்த ஓராண்டாக திட்டமிட்ட பிரச்சாரம் நடத்தி வந்ததாகவும்,

வலுவான கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்க பரப்பப்பட்ட இந்த அஜெண்டாவை உணர்ந்த திருமாவளவன், பேராசிரியர் காதர்மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் ஒருமித்த குரல் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இந்த “முடிந்து போன குரலை அண்ணன் மாணிக்கம் தாகூர் இப்போது எதிரொலிப்பது யாருக்கு பயன் தருவதாக அமையும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேசமயம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நெஞ்சுக்கு நேராக எதிர்த்து நிற்பது காங்கிரஸ் தான் என பதிலடி கொடுத்துள்ள மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது எனவும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்