இந்திக்கு பதிலாக ஆங்கில எழுத்தை அழித்த திமுகவினர்! | DMK | Kadayanallur
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திக்கு பதிலாக திமுகவினர் ஆங்கிலத்தை அழித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த ஆங்கில எழுத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை கருப்பு மையினால் தவறுதலாக அழித்தார். அப்போது தொண்டர்கள் இந்தி எழுத்தை அழிக்க வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, அவர் இந்தி எழுத்துக்களை அழித்தார்.