ராமநாதபுரம் சின்னக்கடை தெருவில் இயங்கி வந்த மீன்கடைகள், நகராட்சி ஊழியர்களால் திடீரென அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், சின்னக்கடை தெருவில் அதிக அளிவில் மீன்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், அங்கு வந்த நரகாட்சி ஊழியர்கள் மீன்கடைகளை அப்புறப்படுத்தி, மீன்களை குப்பை வண்டிகளில் வீசிச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த மீன்வியாபாரிகள் நகராட்சி வண்டியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்