``திமுக கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெறுகிறது'' - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin
திமுக கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருவதாக
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலாளர் பேபி, ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான முதல்வரின் எக்ஸ் பதிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நியமன பதவிகளில் இருப்போர் தடுக்க முடியாது என்றும், தங்கள் கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.