Congress நிகழ்ச்சியில் தேசிய கீதத்தை தவறாக பாடிய பெண் - மூத்த தலைவர்களும் சேர்ந்து பாடிய வீடியோ
கேரளாவில் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தேசிய கீதத்தை தவறாக பாடிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஏற்கனவே நடைபெற்ற காங்கிரஸ் கட்சியில் சமர அக்னி யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிர்வாகி பாலோடு ரவி என்பவர் தேசிய கீதத்தை தவறாக பாடிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு நிகழ்ச்சியிலும், பெண் ஒருவர் தேசிய கீதத்தை தவறாக பாட, முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களும் அதனை அப்படியே தவறாக பாடும் வீடியோ வெளியாகி உள்ளது.