BJP Amitsha | ``தமிழகத்திலும் தோல்வி உறுதி’’ - அழுத்தி சொன்ன அமித்ஷா

Update: 2025-12-29 02:11 GMT

காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் நிச்சயம் தோல்வி கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தோல்விகளால் சோர்வடைந்து விட வேண்டாம் என்று கூறினார்.

பாஜகவின் கொள்கைகளால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதால் வரும் 2029ஆம் ஆண்டிலும் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்