"டாஸ்மாக் முறைகேடு - கட்டாயம் விசாரணை தேவை"... மா., கம்யூ சண்முகம் பரபரப்பு பேட்டி
அமலாக்கத்துறை சொல்வது போல டாஸ்மாக் முறைகேடு நடத்திருந்தால் கட்டாயம் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், 24வது அகில இந்திய மாநாடு பிரச்சார துவக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் பெ.சண்முகம் கட்சிக் கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் விவகாரத்தில், முறைகேடு நடக்க காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.