BJP vs India Bloc | எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட கேப்பில் மத்திய அரசு செய்த சம்பவம்

Update: 2025-08-12 05:11 GMT

தேசிய விளையாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே மக்களவையில் இரண்டு முக்கிய விளையாட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு மசோதாவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அண்மையில் மக்களவையில் அறிமுகம் செய்தார்.

நாட்டில் உள்ள தேசிய விளையாட்டு சங்கங்களை கண்காணிக்க தேசிய விளையாட்டு வாரியம் மற்றும்

விளையாட்டுத்துறையில் உள்ள சச்சரவுகளை தீர்க்க தேசிய விளையாட்டு தீர்ப்பாயம் அமைக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மசோதா விவாதத்திற்கு வந்தபோது, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், விவாதம் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்