ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு திமுக அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாமல் இருப்பது கோழைத்தனம்தான் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம், வேட்டமங்கலம் கிராமத்தில் உழவர் பேரியக்கத்தின் மாநில தலைவர் ஆலயமணியின் தந்தை மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரம் இல்லை என்றால் கூட செய்து முடிப்பவன்தான் உண்மையான வீரன் என்றும், அதிகாரம் இருந்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று கூறுவது கோழைத்தனம்தான் என்றும் தெரிவித்தார்.