அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட் | Annamalai | Bjp | Tweet

Update: 2025-03-04 08:38 GMT

தமிழ் மொழி புலமை குறித்த சமீபத்திய ASER கிராமப்புறம் 2024 அறிக்கையைப் படிக்க முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட அண்ணாமலை, தனியார் பள்ளி மாணவர்களுக்கு வேறு தரத்தை அனுமதிக்கும் அதே வேளையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி முறை தலைகீழாக உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் ஒருவரின் மொழி புலமைக்காக மற்றவர்களை இழிவுபடுத்தும் முன், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மொழி புலமை குறித்த சமீபத்திய அறிக்கையை படிக்க முதல்வர் நேரம் ஒதுக்க வேண்டுமென பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்