கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அன்புமணி தகவல்
தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவர், இந்த தகவலை தெரிவித்தார். சேலம் மாவட்ட பாசன வசதிக்காக மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்தார். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தராததால், இரண்டு வருடங்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து உபரிநீராக வெளியேறிய 512 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது என்றும் அவர் தெரிவித்தார்.