சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், வரும் 16ம் தேதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. 2026 ம் ஆண்டுசட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, அதிமுகவில், மாவட்ட வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொகுதியின் நிலைப்பாடு, பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட முடிவுகள் குறித்து 15ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து வருகின்ற 16ஆம் தேதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது