``இன்னும் எத்தன நாள் தள்ளி போட போறீங்க விஜய்'' - கஸ்தூரி சரமாரி கேள்வி

Update: 2025-04-18 07:02 GMT

தவெக தலைவர் விஜய் மக்களை சந்திப்பதை எவ்வளவு காலம் தள்ளி போட போகிறார் என நடிகை கஸ்தூரி கேள்வியெழுப்பியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நேர் எதிர்க்கட்சி திமுக, அதிமுக மட்டுமே எனத்தெரிவித்தார். மேலும், தமிழக மக்களின் முக்கியப் பிரச்சினைகளை தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மென்மையாக கையாளுவதாகவும் கஸ்தூரி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்