ராஜ்பவனுக்கு நேரில் அழைப்பு.... மரபை மாற்றிய ஆளுநர்

Update: 2025-04-13 10:01 GMT

கம்பர் நாளை முன்னிட்டு, தமிழறிஞர்களை

ஆளுநர் மாளிகைக்கு அழைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மரபை மாற்றி, குடியரசுத் தலைவர், பிரதமர் தங்கும் அறைகளில் அவர்களை தங்க வைத்தார். 67 ஆண்டுகளுக்குமுன், முதல் பதிப்பாக வெளிவந்த கம்பராமாயணத்தை தனது சொந்த செலவில் மீண்டும் பதிப்பித்த ஆளுநர், அதற்காக தமிழறிஞர்களை அழைத்து அவர்கள் மூலம் வெளியிட்டார். இதையொட்டி தமிழறிஞர்கள் சரஸ்வதி ராமநாதன், 100 வயதாகும் மா. ராமசாமி, மரபின் மைந்தன் முத்தையா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழறிஞர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து தங்க வைத்தார். இது தமிழறிஞர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்