ஜெர்மனியில் பட்டையை கிளப்பும் சென்னை சிறுவன் - நேரில் பார்த்து புல்லரித்த தமிழக CM
ஜெர்மனியில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்த ரேஸர் "ஜேடன் இமானுவேல்"
13 வயது இளம் ரேஸரான "ஜேடன் இமானுவேல்" ஜெர்மனியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். சென்னையை சேர்ந்த "ஜேடன் இமானுவேல்" 10 வயது முதல் MINI GP ஜெர்மனி பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் ஜெர்மனி சென்ற தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இவரது சாதனைகளை கேட்டறிந்த தமிழக முதல்வர், இன்னும் நிறைய வெற்றிகளை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார். இதற்கு முன்பு நடிகர் அஜித்குமார் இந்த சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.