ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் முறைப்படுத்துதல் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் இது சட்டமாக நடைமுறைக்கு வரும்.
இந்த மசோதா மின் விளையாட்டுகள் (E-Sports) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் பண விளையாட்டு சேவைகள், ஆன்லைன் ஃபேண்டஸி ஸ்போர்ட்ஸ் , ஆன்லைன் சூதாட்டம், விளம்பரங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளைத் தடை செய்கிறது.
ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தினால் 03 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.