காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (24.08.2025) | 9 AM Headlines | ThanthiTV
- இன்று தமிழ்நாடு வருகிறார் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி....முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோருகிறார்....
- ஆகஸ்ட் 26ம் தேதி முதல் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிப்பு....சென்னையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் திட்டத்தை விரிவுபடுத்தி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.....
- ராமேஸ்வரத்தில் 110 ஆண்டுகளை நிறைவு செய்த பழைய பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு....ஒப்பந்தப்புள்ளி கோரியது ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம்...
- சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே பிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை சுமார் 1 லட்சம் ரூபாய்க்கு பெற்றோர் விற்ற அதிர்ச்சி சம்பவம்....
- சேலத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி மிரட்டிய சம்பவம்....2 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலீசார்....
- மதுரை மாநாட்டை குறிப்பிட்டு தவெக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் கடிதம்...மதுரையில் நடந்த மாநில மாநாடு தன்னைத் திக்குமுக்காடச் செய்ததாக நெகிழ்ச்சி...
- அதிமுக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு....
- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக, முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
- குலசேகரப்பட்டினத்தில் இருந்து தனியார் ராக்கெட் ஏவ திட்டம்...மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்....
- இந்தியாவுக்கென பிரத்யேகமான விண்வெளி ஆய்வு மையம் 2035ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு...
- சொத்து வரியை 6 சதவிகிதம் ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும் என்ற அரசாணையை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி வழக்கு...
- நாளை வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...