Putin | Zelensky | "புத்தாண்டிலும் தாக்குதலை தொடரும் ரஷ்யா.." ஜெலென்ஸ்கி
ரஷ்யா வேண்டுமென்றே புத்தாண்டில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்... ஒரே இரவில் உக்ரைனுக்கு எதிராக இருநூறுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்... மேலும் இந்த தாக்குதலை முறியடித்த அனைத்து உக்ரைன் வீரர்களுக்கும் நன்றி கூறுவதாக குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்கு நட்பு நாடுகள் திட்டமிட்டபடி வான்பாதுகாப்பு அமைப்புகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்...