கன்னியாகுமரி அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி +1 மாணவியை கர்ப்பமாக்கிய கேரளாவை சேர்ந்த பொறியாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சோதனை செய்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரிய வந்தது. கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி கேரளாவை சேர்ந்த விஜேஷ் என்பவருடன் இன்ஸ்டா மூலம் பழகிய நட்பு விபரிதத்தை ஏற்படுத்தியுள்ளது . தலைமறைவாக உள்ள இளைஞர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.