சிரியாவின் வடமேற்கு லதாக்கியா பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி முழுமையாக அழிந்துள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒயிட் ஹெல்மெட் என்றழைக்கப்படும் சிரிய சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 28 இடங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 ஆயிரம் ஹெக்டேர் வனப் பகுதிகள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட குழுவினருடன், துருக்கி மற்றும் ஜோர்டான் தீயணைப்பு படைகள் இணைந்து காட்டுத்தீயை அணைக்க உதவி செய்துவருகின்றன. காற்று மாசு மற்றும் தீ பரவல் காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.