கேரள EX.CM அச்சுதானந்தன் மறைவு - இறுதியாக பார்க்க திரண்ட பெரும் கூட்டம்
கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த வி.எஸ் அச்சுதானந்தன் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலக தர்பார் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது . அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். அதன் பின்பு அவரது சொந்த ஊரானஆலப்புழாவில் ஜுலை 23 (நாளை) மாலை 4 மணிக்கு அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வி.எஸ் அச்சுதானந்தனின் மறைவையொட்டி ஜுலை 22 (இன்று) கேரள மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.