பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு இந்திய யூடியூபர் கைது பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டதாக, ஹரியானா மாநிலம் பல்வல் மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட் கிராமத்தை சேர்ந்த வாசிம் அக்ரம் என்பவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் ஹரியானாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ஆகியவற்றிற்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதி மல்கோத்ரா என்ற பெண் யூட்யூபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.