Yogi Adityanath vs Akhilesh Yadav |யோகியை பார்த்து வார்த்தையை விட்ட அகிலேஷ் - கொதிக்கும் உபி அரசியல்

Update: 2025-10-13 09:20 GMT

"யோகி ஆதித்யநாத்தை மீண்டும் உத்ரகாண்ட் அனுப்புவோம்" - அகிலேஷ் யாதவ் சூளுரை

உத்ரகாண்டை பூர்விகமாக கொண்ட யோகி ஆதித்யநாத்தை மீண்டும் அங்கேயே திருப்பி அனுப்புவோம் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சூளுரைத்தார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தர பிரதேசத்தில் ஏராளமானோர் ஊடுருவி விட்டதாக கூறினார். அந்த வகையில், பாஜகவிலும் உத்ரகாண்டில் இருந்து வந்த யோகி ஆதித்யநாத், ஊடுருவி இருப்பதாக கூறிய அகிலேஷ் யாதவ், அவரை மீண்டும் தனது சொந்த மாநிலத்துக்கே அனுப்ப வேண்டுமென தெரிவித்தார். உத்தர பிரதேசத்திலிருந்து பிரிந்து கடந்த 2000-ஆம் ஆண்டில் உத்ரகண்ட் தனி மாநிலமாக உருவானது. யோகி ஆதித்யநாத் பிறந்த பாரி கர்வால் கிராமம் தற்போதைய உத்ரகண்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்