இந்திய அணியின் நம்பர் 4 பேட்டர் யார்? - எகிறும் எதிர்பார்ப்பு

Update: 2025-05-14 02:08 GMT

இந்திய டெஸ்ட் டீம்ல நம்பர் FOUR பேட்டிங் ஆர்டருக்கு மட்டும் தனி வரலாறும், பெருமையும் உண்டு..

கடந்த 3 தசாப்தங்களா அந்த இடத்துல களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட்ல ஜொலிச்சவங்க சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி...

சச்சின் ஓய்வுக்கு பிறகு கோலி அந்த இடத்தை கெட்டிய பிடிச்சி கொடி கட்டி பறந்தாரு.

இப்ப கோலி ஓய்வு அறிவிச்சிட்டாரு.. அடுத்து அந்த இடத்துல இறங்கப்போறது யார்னு மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கு...

இந்திய டீமோட எதிர்காலம்னு சொல்லப்படுற சுப்மன் கில், அடுத்த கேப்டனா நியமிக்கப்படலாம்னு சொல்லிட்டு இருக்காங்க.. ஒருவேளை பெருமைமிக்க அந்த நம்பர் 4-அ கில் எடுத்துக்கவும் வாய்ப்பிருக்கு. வாசிம் ஜாபர் மாதிரி முன்னாள் வீரர்கள் பலர் கில் அந்த இடத்துக்கு தகுதியானவர்னு சொல்லிட்டு இருக்காங்க..

இன்னொரு பக்கம், டெஸ்ட் டீம்ல சீரிஸ்க்கு சீரிஸ் பேட்டிங் பொசிஷனை மாத்தப்படுற ராகுல் அந்த இடத்துல இறக்கப்பட வாய்ப்பிருக்கு. முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் ராகுலை அந்த இடத்துல இறக்கனும்னு சொல்லியிருக்காரு.

இவர்களை தவிர ஸ்ரேயஸ் ஐயரும் டெஸ்ட் கம்பேக்கிற்காக காத்திருக்காரு..

இப்படி இருக்க, இவர்தான் அடுத்த நம்பர் 4 பேட்டர்னு ஃபேன்ஸும் வீரர்கள் பெயரை சொல்லிட்டு வர, சோசியல் மீடியாவுல இந்து ஹாட் டாபிக்கா சுத்திட்டு இருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்