அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பட்டுள்ளன.
Hair oil, ஷாம்பு, Toothpaste, Tooth Brushes, Shaving Cream உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. வெண்ணெய், நெய், சீஸ், பால் பொருட்கள், பழச்சாறுகள், இறைச்சி, மீன், Feeding Bottles, குழந்தைகளுக்கான நாப்கின்கள், மருத்துவ டயப்பர்கள், தையல் இயந்திரங்கள் மற்றும் அதன் பாகங்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளன. இதேபோல சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம், பிஸ்கட்கள், பேக்கரிப் பொருட்கள் உள்ளிட்டவை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டு உள்ளன.