மனைவியுடன் தகாத உறவு? - தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்..!
காரைக்காலில் மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக உறவுக்கார தம்பியை, அண்ணனே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் பத்து பகுதியை சேர்ந்த, நாடோடி இனத்தைச் சேர்ந்த இளைஞரான ராகுல், அவரது தாய்வழி அண்ணனான கெளதம் என்பவரின் மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கெளதம் மற்றும் அவரது மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராகுல் வீட்டிற்கு தனது கூட்டாளிகளுடன் வந்த கெளதம், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராகுலை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராகுலின் உடலை மீட்டு தப்பியோடிய கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.