Wagah Border blast case | வாகா குண்டுவெடிப்பு.. மரண தண்டனை.. 300 ஆண்டுகள் சிறை.. 3 பேர் ரிலீஸ்

Update: 2025-11-06 05:34 GMT

வாகா எல்லையில் தாக்குதல் நடத்திய 3 குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த மரண தண்டனை மற்றும் 300 ஆண்டுகள் சிறை தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததோடு, அவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை எனக் கூறி அவர்களை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த வாகா எல்லை குண்டுவெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களை லாகூர் உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்