மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் வீடியோ - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-08-26 02:26 GMT

மாற்றுத்திறனாளிகள், மகளிர், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எதிரான சமூக வலைதளப் பேச்சுகளைத் தடுக்க வழிகாட்டுதல்கள் உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றத்திறாளிகளை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட சோஷியல் மீடியா பிரபலங்களுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மனு தாக்கல் செய்தனர். மாற்றுத்திறனாளிகள், மகளிர், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு எதிரான சமூக வலைதளப் பேச்சுகள் கருத்து சுதந்திரம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளை எள்ளி நகையாடிய வீடியோ தொடர்பாக, யூட்யூபர்கள் சமய் ராய்னா, விபுன் கோயல் உள்ளிட்டோர் மன்னிப்பு கோர உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்