Uttarakhand Landslide மளமளவென கண் முன்னே சரிந்த மலை.. நொடியில் உயிர் தப்பிய பாஜக எம்பி
நிலச்சரிவு- நொடி பொழுதில் உயிர் தப்பிய பாஜக எம்.பி.
உத்தரகண்டில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பாஜக எம்.பி. அனில் பலூனி ஆய்வு செய்தபோது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் நொடி பொழுதில் உயிர் தப்பினார். மலை பிரதேசமான உத்தரகண்டில் அடைமழை பொழிவால் வரலாறு காணாத மழை பெய்ததுடன், நிலச்சரிவும் ஏற்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட மலை பகுதியை பாஜக எம்.பி. அனில் பலூனி ஆய்வு செய்தபோது மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு மலை பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சில மீட்டர் தூரம் இடைவெளி இருந்ததால், பாஜக எம்.பி.யும், அதிகாரிகளும் தப்பினர்.