Uttarakhand| உத்தரகாண்டில் பள்ளி அருகே 160 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
- உத்தரகாண்ட் மாநிலத்தில், அரசுப்பள்ளி அருகே, 160க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளி அருகில், மாணவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான பொருளை பார்த்ததும் அதுகுறித்து, பள்ளி முதல்வருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 161 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.