விவசாயிகளை பார்த்ததும் திடீரென சேற்றில் இறங்கி ராகுல்காந்தி செய்த செயல்

Update: 2025-08-23 08:17 GMT

விளைநிலத்தில் இறங்கிய ராகுல்காந்தி - விவசாயிகள் நெகிழ்ச்சி

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் 'வாக்காளர் உரிமை' யாத்திரை 7வது நாளை எட்டியது. பீகார் மாநிலம் கதிஹாரில் யாத்திரையில் ஈடுபட்ட ராகுல்காந்தி, மக்கானா சாகுபடி செய்யும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது தண்ணீர், சேறு நிரம்பிய விளைநிலத்தில் முகம் சுழிக்காமல் இறங்கிய ராகுல்காந்தி, மக்கானா உற்பத்தி முறை குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், விவசாயிகளின் தோளில் கையை போட்டு ராகுல்காந்தி புகைப்படம் எடுத்த நிகழ்வு விவசாயிகளை நெகிழ வைத்தது. 

Tags:    

மேலும் செய்திகள்