UP Woman | CCTV | இரவில் நடுரோட்டில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்கள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுன் பகுதியில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயினை பறித்த மூவர் கைது செய்யப்பட்டனர். மவுனி கோவில் அருகே நடந்து சென்ற பெண்ணை, பின் தொடர்ந்து மூன்று பேர் வந்தனர். பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, அவர் அணிந்திருந்த தாலி செயினை பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் தப்பினர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. இதையடுத்து, சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் மூன்று கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். திருடர்கள் நொண்டியபடி வரும் காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது..