உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன் கிரேவியில், பல்லி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை சாப்பிட்ட நீரஜ் என்பவர், தொடர்ந்து வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.