இந்தியா-பாகிஸ்தான் இடையே விரைவில் பதற்றம் தணியும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இருநாட்டு தாக்குதல் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருநாடுகளும் பதற்றத்தை தவிர்க்க வேண்டுமென அப்போது வலியுறுத்தியுள்ளார்.