Republicday | குடியரசு தின விழாவில் திடீரென மயங்கி விழுந்த கேரள அமைச்சர் - தூக்கி கொண்டு ஓடிய போலீஸ்
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற கேரள அமைச்சர் திடீரென மயங்கி விழுந்த சம்பவத்தால் பரபரப்பு
கேரள மாநிலம் கண்ணூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா நடைபெற்றது
விழாவில் கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் பங்கேற்றார்
மேடையில், பேச துவங்கிய சில நிமிடங்களில் அமைச்சர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் சக அதிகாரிகள் தாங்கி பிடித்தனர். சில நிமிடங்களில் அமைச்சர் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.