Train | Passengers | ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்
ரயில் பயணிகளுக்கு அதிரடி ஆஃபர் - மத்திய அமைச்சர் அறிவிப்பு
முதன்முறையாக, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பயண தேதிகளை மாற்ற ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் எதிர்பாராத விதமாக பயண தேதியை மாற்ற விரும்பினால், ஏற்கனவே எடுத்த டிக்கெட்டுகளை ரத்து செய்து, மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டும், இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி மாதம் முதல், பயணிகள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைனில் மாற்றலாம் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.